Month: October 2020
உங்கள் கால் விரல் நகம் வளைவுகளின் முனையோ விளிம்போ வளைந்து சுற்றியுள்ள தோலில் வளரும்போது குழி நகம் (ingrown toenail )நிகழ்கிறது.
இது சிவந்து, வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிகவும் பொதுவானது. உங்கள் பெருவிரல் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடும். நகம் பொதுவாக தட்டையாக(flat ) இருக்கும்.
பெரும்பாலும், தட்டையாக வளரும் நகத்தில் பிரச்சனை இருக்காது. குழி நகம் (ingrown toenail ) உள்ளவர்களுக்கு உள்பக்கம் வளைந்து வளரும்போது, சமையத்தில் அந்த நகத்தை சுத்தி தொற்று(infection ) வர ஆரம்பிக்கிறது. அதை நகசுத்தி (Paronychia) என்பார்கள். இது குழி நகத்தின் காரணமாக ஏற்படும்.
நக சுத்தியா…? ஹாஸ்பிட்டல் போக வேண்டாம்…எந்த நிலையிலும் இத வீட்லயே பண்ணுங்க போதும்..!… என்று மிக மிக அலட்சியமாக அணுகுவது தவறு.
அனால் பாத விரல்களில் தோற்று ஏற்பட்டு விட்டாலோ , அழுத்தத்தின் காரணமாக தாங்க முடியாத வலி இருந்தாலோ , நடந்து செல்ல சிரமம் இருந்தாலோ , குணமாகாமல் அப்படியே இருந்தாலோ .. பாத சிறப்பு மருத்துவரை (Podiatrist ) அணுகுவது சிறந்தது .