Categories
பாத மருத்துவம்

சர்க்கரை நோய் பாதப் புண் பற்றி அறிவோம்

சர்க்கரை நோய் பாதப் புண் பற்றி அறிவோம்

2

சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்பு மற்றும் ரத்தக்குழாய் பாதிப்பால் கால் அழுகிவிடும. அந்த நிலையை அடைந்து விட்டால் பாத விரல்களையோ அல்லது காலையோ அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்

3

அதிகப்படியான சர்க்கரை நோய் பாதப் புண் கிருமிகள், Staphylococcus aureus எனப்படும் கிருமி வகையாகும். இது Aerobic Gram Positive Cocci எனப்படும் வகையைச் சேர்ந்தது

4

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கால்களை இழக்கும் வாய்ப்பு, மற்றவர்களை விட இருபது மடங்கு அதிகமாகும்

5

நீரழிவு கால் புண் நோய் எப்பொழுதுமே வலி ஏற்படுத்தக் கூடியது அல்ல. இதில் சம்பந்தப்பட்டுள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு இருந்தால், ஒருவரால் வலியை உணர முடியாது. இது மோசமான நிலை என்பதால் இதற்கான சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்தல் அவசியம். நீரழிவு புண்
தடிமனான தோல் எல்லையுடன் கூடிய சிகப்பு பள்ளம் போன்று காட்சியளிக்கும்.

மோசமான நேரங்களில் இந்த சிகப்பு பள்ளம் அடிப்படை தசை நாளங்கள் மற்றும் எலும்பு வரை மிக ஆழமாக செல்லக்கூடியது. அழற்சியின் காரணமாக வீக்கம், வெப்பத்தன்மை மற்றும் வலி போன்றவைகள் ஏற்படலாம்.

இறுதி நிலைகளில் திரவ வெளியேற்றம், துர்நாற்றம் மற்றும் நிறம் மாறிய கிரணுலேஷன் டிஸ்யூ(Granulation tissue) ஆகியவை காணப்படலாம்.

6

அதிக சர்க்கரை நோய் அளவு காரணமாக, காலில் காயம் ஏற்படும் நிலையில், ரத்த வெள்ளை அணுக்களின் போர் குணம் செயல் குறைந்து காணப்படும். ஆகவே வெளியிலிருந்து கிருமிகள், சிறிய கீறல் சிராய்ப்பு மூலம் காலினுள் புகுந்து, சீழாக மாறி மேலும் மோசமடைய காரணமாகிவிடும்

7

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். அவர்களுக்கு பாத நோய் தீவிரமானால், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, பாதை நோய் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாகி பாத நோய் வீரியமாக பரவ செய்யும். அதனால் நம் கை மற்றும் முகங்கள் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு பாதங்களையும் கால்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

8

நீரழிவு நோயாளிகளின் கிருமி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக, கால்களில் ஏற்படும் காயங்களில் இலகுவாக கிருமித் தொற்று ஏற்படுகிறது. இதனால் ஒரு சிறிய காயம் மிக விரைவாக முழு கால்களுக்கும் பரவி, இறுதியாக விரல்கள் அல்லது கால் அகற்றப்பட வேண்டிய நிலை உண்டாவதற்கு அதிக காலம் ஏற்படுவதில்லை. உண்மையில் காயத்துக்குள்ளான நீரழிவு நோயாளி காயத்தை சரியான முறையில் கவனிக்காமல் விடுவதால் காயத்தில் கிருமித்தொற்று உண்டாகின்றன. நரம்புகள் பாதிக்கப்படுவதாலும் குருதி வழங்குதல் குறைவதாலும், அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுவதாலும், இறுதியில் பாதங்கள் உருக்குலைந்து விடுகின்றன.

9

சர்க்கரை நோய் தற்போது அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. தவறான உணவு பழக்கங்களும்,
உடல் உழைப்பு இல்லாததும், இதற்கு காரணமாகும். சர்க்கரை நோயாளிகள் கால்களில் புண் ஏற்பட்டால் அது ஆறுவது சிரமமாகும். பல நேரங்களில் விரல்களையோ கால்களையோ இழக்க நேரிடலாம், சில நேரங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படலாம்

10

சர்க்கரை நோய் கால் பாதிப்பை அறிந்து கொள்ள என்னென்ன பரிசோதனை தேவை என்றால், டாப்ளர் (Doppler) பரிசோதனை – காலில் ரத்தக்குழாய் அடைப்பை கண்டறிய உதவும் பரிசோதனை, கால் நரம்பு அதிர்வு பரிசோதனை, காலில் வெப்ப நிலை மற்றும் குளிர்ந்த தன்மை அறியும் பரிசோதனை, காலில் புண் வர வாய்ப்புள்ளதா என அறியும் பாத அழுத்த பரிசோதனை, வெறும் வயிற்றில் மற்றும் சாப்பிட்ட பின் சர்க்கரை பரிசோதனை, மூன்று மாத கால சர்க்கரை கட்டுப்பாட்டு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி ஆலோசனை மற்றும் உணவு ஆலோசனை அவசியம். கால் பாதிப்பை தடுக்க இவை மிகவும் முக்கியமானவை.

11

நீரழிவு கால் புண் நோய் சிகிச்சை முறைகள்: முதலில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அழுகிய நிலையில் உள்ள தசை மற்றும் எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல், பின்னர் ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை Angioplasty அல்லது Bypass எனப்படும் சிகிச்சை முறையினால், ரத்த ஓட்டத்தை அதிகரித்தல். நோய் தொற்று கட்டுப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பு போன்ற மருந்துகளை(Antibiotics) உட்கொள்ளுதல், சர்க்கரை நோய் அளவை கட்டுப்பாட்டில் வைத்தல், Hyperbaric Oxygen Therapy எனப்படும் உயரழுத்த ஆக்சிஜன் சிகிச்சை முறைகள் , எதிர்மறை காய அழுத்த சிகிச்சை எனப்படும் Vaccum Therapy, போன்ற சிகிச்சை முறைகள், ஓசோன் சிகிச்சை முறைகள், நவீன டிரஸ்ஸிங் (Advanced Wound care Dressing Material) எனப்படும் அதிநவீன டிரெஸ்ஸிங் கட்டுகளை பயன்படுத்துதல், போன்ற சிகிச்சைகளின் மூலம் சர்க்கரை நோய் பாத புண்களை நன்றாக குணப்படுத்தலாம்

12

காலில் சிறிய கீறல் புண்ணாக மாறிய பிறகும் உரிய மருத்துவ சிகிச்சை செய்யாவிட்டால், காயம் ஏற்பட்ட பகுதி வீங்கத் தொடங்கும். நடக்க முடியாத கடும் வலி இருக்கும். தோலில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட வாய்ப்புண்டு. அப்பொழுதும் கவனிக்காத நிலையில், சீழுடன் கூடிய புண் உள்ள செல்கள் போரில் தோற்று மடியத் தொடங்கும். புண் ஏற்பட்ட இடம் மெதுவாக கருகி அழுகத் தொடங்கும். இவ்வாறு படிப்படியாக காயம் ஏற்பட்ட பகுதி அழுகும் நிலைக்கு Gangrene என்று பெயர். இந்த இடத்தில் தொட்டால் ஜில்லென்று இருக்கும். காயம் ஏற்பட்ட பகுதிகளில் செல்கள், முழுவதும் அழிந்து விட்டநிலையில் நோய்தொற்று மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க கால்விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். பாதம் முழுவதும் அழுகும் நிலையில் முழங்கால் வரை அகற்ற வேண்டியிருக்கும்

13

சர்க்கரை நோய் உள்ளவர்களில் சிலருக்கு வேறு சில நோய்கள் இருப்பின் அவர்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாடு ,ரத்த அழுத்தக் கட்டுப்பாடு, கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு, தைராய்டு கட்டுப்பாடு, இருதய நோய் சிகிச்சை மாத்திரைகள் உட்கொள்ளுதல், சிறுநீரக பிரச்சனை இருப்பின் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் நல்லது. சர்க்கரை நோய் பாதப் புண் உள்ளவர்கள் மேற்கொண்டு அனைத்து சிகிச்சையையும் ஒன்றிணைந்து மேற்கொள்ளுதல் அவசியம்